சீனாவில் தற்போது நிலவி வரும் மிகக் கடுமையான புயல், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்நாடு வரலாறு காணாத இயற்கை பேரிடரைச் சந்தித்து வருகிறது. இந்த வெள்ளப் பாதிப்புகளுக்கு மத்தியில், அங்குள்ள ஒரு பாம்பு பண்ணையிலிருந்து சுமார் 900 விஷப்பாம்புகள் தப்பி ஓடியுள்ள சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷப்பாம்புகள் பல வெள்ள நீரில் மிதந்து கொண்டிருப்பதோடு, சில பாம்புகள் மக்களின் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளன. இதனால் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினருக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் மற்றும் எல் நினோ விளைவுகளால் ஏற்பட்டுள்ள இந்த திடீர் வெள்ளப் பெருக்கு, சீனாவின் தென் பகுதியான குவாங்ஷி மாகாணத்தை மிக மோசமாகப் பாதித்துள்ளது.
बाढ़ में स्नेक फार्म से भागे 900 जहरीले सांप, कई तैरते दिखे तो कुछ घरों में घुसे! चीन में कुदरत का ऐसा कहर पहले नहीं देखा https://t.co/nHVQfiLppJ
“>
மேலும் அங்குள்ள 55 ஆறுகளில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளதால், அங்கு மிக ஆபத்தான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கையாள சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங், மீட்புக் குழுவினர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ‘ஆல்-அவுட்’ எனப்படும் முழு வீச்சில் மீட்புப் பணிகளில் ஈடுபடுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதனால் ஏரிகள், அணைகள் மற்றும் ஆறுகளை 24 மணி நேரமும் கண்காணித்து மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க அறிவுறுத்தியுள்ளார். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்க, பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களின் காற்று நிரப்பப்பட்ட படகுகளுடன் மீட்புப் பணியில் இணையுமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் ஒருபுறம் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர் மக்களை அடித்துச் செல்லும் அபாயம் இருந்தாலும், மறுபுறம் நீரில் மிதக்கும் நூற்றுக்கணக்கான விஷப்பாம்புகளின் பயம் மீட்புப் பணிகளுக்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது.
