மும்பை அருகே சாஸ்திரி நகர் நகராட்சி மருத்துவமனையில் பெண் டாக்டர், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை சிவசேனா கவுன்சிலர் ரமேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் NICU படுக்கைகள் காலியாக இல்லாததால், கர்ப்பிணிப் பெண்ணை வேறு மருத்துவமனைக்கு மாற்றும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த கவுன்சிலர், போனில் பேசிக்கொண்டிருந்த பெண் டாக்டரை பின்னால் இருந்து பலமாகத் தாக்கியுள்ளார். இதில் அவரது போன் கீழே விழுந்ததுடன், மற்ற ஊழியர்களும் தாக்கப்பட்டதால் மருத்துவமனை பணியாளர்கள் அச்சத்தில் கண்ணீர் விட்டு அழுதனர். இந்தக் கொடூர தாக்குதல் வீடியோ ஆதாரத்துடன் வெளிவந்த பிறகும், கவுன்சிலர் ரமேஷ் எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஆணவத்துடன் பேசியுள்ளார்.
कल्याण-डोंबिवली महानगरपालिकेच्या (KDMC) शास्त्री नगर रुग्णालयातील डॉक्टर आणि वैद्यकीय कर्मचाऱ्यांना झालेली मारहाण अत्यंत निषेधार्ह आहे. एक डॉक्टर म्हणून मला माहीत आहे की, रुग्णसेवा ही केवळ एक नोकरी नसून ती मानवतेची सेवा आहे. अत्यंत प्रतिकूल आणि तणावपूर्ण परिस्थितीत डॉक्टर,…
— Dr Shrikant Lata Eknath Shinde (@DrSEShinde) July 8, 2026
செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “நான் பெண் டாக்டரை தாக்கவே இல்லை, நாங்கள் சொன்ன புகாரைக் கேட்காமல் அவர் போனில் பேசிக்கொண்டிருந்ததால் போனை தட்டிவிடத்தான் முயற்சித்தேன். சிசிடிவி கேமரா அங்கிளில் அப்படித் தெரிகிறது. அநீதியை எதிர்க்கவே பாலாசாஹேப் தாக்கரே எங்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளார். எங்கள் செயலால் ஒரு பெண்ணின் உயிரும், குழந்தையின் உயிரும் காப்பாற்றப்பட்டுள்ளது, எனவே நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என கூறியுள்ளார்.
இதற்கிடையே, இந்த சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே, சட்டத்தைக் கையில் எடுத்தவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்சி ரீதியாகவும் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் உறுதியளித்துள்ளார்.
