இந்திய டி20 அணியின் துணை கேப்டன் சுப்மன் கில், சமீப காலமாக டி20 போட்டிகளில் சரியாக ரன் எடுக்காமல் தடுமாறுகிறார். இதனால், அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு, அதிரடி வீரர் ஜெய்ஸ்வால் அல்லது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் போன்றவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது. கில் நீக்கப்பட்டால், பேட்டிங் வரிசையில் ஃபினிஷர் ரிங்கு சிங்கைச் சேர்த்து அணியை மேலும் பலப்படுத்தலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

​இதுபற்றிப் பேசிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏ.பி. டி வில்லியர்ஸ், “கில் இரண்டு, மூன்று முறை சொதறியதற்காக உடனே அவரை நீக்கக் கூடாது. அவருக்கு இன்னும் கொஞ்சம் பொறுமை தேவை. அதிரடி வீரர்களை சமாளிக்க, கில் போன்ற நிலையான ஆட்டக்காரரும் அணிக்குத் தேவை.

நான் ஜெய்ஸ்வால் மற்றும் அபிஷேக் ஷர்மாவைத் தொடக்க வீரர்களாகக் கொண்டு வந்து, கில்லை மூன்றாவது இடத்தில் விளையாட வைப்பேன். கில் திறமையான வீரர், முக்கியப் போட்டிகளில் ரன் எடுப்பார். அதனால், நான் அவரை நீக்க மாட்டேன்” என்று கில்லுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.