கோவையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவையில் முன்னதாக மெட்ரோ லைட் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மெட்ரோ லைட் என்றால் அந்த ட்ரெயின் மெதுவாக செல்லும் மற்றும் குறைந்த பெட்டிகள் தான் இருக்கும். தொழில் நகரமான கோவை நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மெட்ரோ லைட் திட்டத்திற்கு பதிலாக வழக்கமான மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.