தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(27) இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி அபிநயா. இந்த தம்பதியினருக்கு ஆறு வயது மகள் உள்ளார். அதே ஊரைச் சேர்ந்த போலீஸ்காரரான தாமோதரன்(32) தற்போது சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று அதியமான் கோட்டை மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் விழா நடைபெற்றது. பின்னர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்ற போது ஏரிக்கரை ஓரமாக நடந்து சென்ற ராஜகுமாருக்கும் தாமோதரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் கோபம் அடைந்த தாமோதரன் ராஜ்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனால் படுகாயமடைந்த ராஜகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு ராஜ்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தாமோதரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
