மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் உள்ள சிந்தாமன் கணேஷ் கோவிலில் கடந்த சனிக்கிழமை மதியம் பரபரப்பான சம்பவம் நடந்தது. மகேஷ் யாதவ் என்ற நபர், காகிதத்தில் சுற்றி மறைத்த கூர்மையான ஆயுதத்துடன் கோயிலுக்குள் நுழைந்து, கோயில் பூசாரி ஜெய் துபே மற்றும் லோகேஷ் சோனியை மிரட்டினார். ஒரு நாற்காலியில் அமர்ந்த நிலையில், பூசாரியின் கழுத்தில் ஆயுதத்தை வைத்து, “24 மணி நேரத்தில் பணம் தரவில்லை என்றால் தாக்குவேன் ” எனக் கூறி மிரட்டினார்.
இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில், மகேஷ் யாதவ் கோயிலுக்குள் நுழைந்து, ஆயுதத்தை காட்டி பயமுறுத்தும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. மேலும், அவர் பூசாரியின் மகனையும் உதவியாளரையும் தள்ளித் தள்ளி மிரட்டும் காட்சிகளும் உள்ளன. இந்த சம்பவம் கோயிலில் இருந்த பக்தர்களிடையே பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
सीहोर: सोशल मीडिया पर एक वीडियो वायरल है जो कि प्राचीन गणेश मंदिर का बताया जा रहा है. वीडियो में एक व्यक्ति धारदार हथियार लिए मंदिर परिसर में दादागिरी करता दिख रहा है.
जानकारी के अनुसार शनिवार को एक व्यक्ति मंदिर में घुस गया. मंदिर पुजारी और मंदिर सेवक को धारदार हथियार दिखाकर… pic.twitter.com/bdrM5Gl3b2
— AajTak (@aajtak) July 27, 2025
“>
இதையடுத்து, பூசாரி அளித்த புகாரின் பேரில், மண்டி காவல் நிலைய போலீசார் மகேஷ் யாதவ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். . “இந்த சம்பவத்தில், மகேஷ் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என அவர் கூறினார். இந்த சம்பவம் செஹோர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
