பெங்களூரு அருகே மாச்சோஹள்ளி கேட் பகுதியில் உள்ள ஒரு தங்க நகைக்கடை கடந்த வியாழக்கிழமை இரவு மூடப்படும் நேரத்தில் பரபரப்பு சம்பவம் நிகழ்ந்தது.
அப்போது கையில் துப்பாக்கி போன்ற ஒன்றுடன் மூன்று நபர்கள் திடீரென கடைக்குள் நுழைந்தனர். உள்ளே இருந்த கடை உரிமையாளர் மற்றும் பாதுகாவலர் அவர்களை தடுக்க முயன்றாலும், அவர்களைத் தள்ளி விட்ட குற்றவாளிகள், சுமார் 180 கிராம் தங்க நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
“हिलना नहीं-हिलना नहीं”….फिल्मी स्टाइल में लूटी दुकान
◆ घटना का सीसीटीवी फुटेज बैंगलोर की ज्वेलरी शॉप का बताया जा रहा
◆ नकाबपोश हमलावरों ने लोगों को गन पॉइंट पर रखकर की लूटपाट #Bengaluru | #ViralVideo | Jewellery Shop pic.twitter.com/5fNrSJaBxP
— News24 (@news24tvchannel) July 26, 2025
“>
சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களைக் கேட்டு விரைந்து வந்த போலீசார், விசாரணையின் போது அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி போலி (டை கன்) என்பதை கண்டறிந்தனர். குற்றவாளிகள் யாரென்று போலீசாருக்கு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன என்றும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்ற நம்பிக்கையை போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் சந்தேக நபர்களை அடையாளம் காண சிசிடிவி காட்சிகள் வழியாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
