‘லியோ’ படம் வெற்றிபெற படக்குழுவினர் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம், வரும் அக். 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதற்கான புரொமோஷன் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னா தலைமையிலான படக்குழுவினர் திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரு அர்ச்சனையை போட்டுள்ளனர்.