நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், விராட் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட் இடையேயான மோதல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இப்போட்டியில் ஹைதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற போதிலும், ஆட்டத்திற்குப் பின் இரு வீரர்களுக்கும் இடையே நிலவிய கடும் பதற்றமே தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது. ஆர்சிபி அணி இலக்கைத் துரத்தியபோது, விராட் கோலி தனது வழக்கமான ஆக்ரோஷத்துடன் டிராவிஸ் ஹெட்டிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதன் தொடர்ச்சியாக, போட்டி முடிந்த பின்னர் இரு அணிகளின் வீரர்களும் வழக்கமாகக் கைகுலுக்கிக் கொள்ளும் நிகழ்வின் போது, விராட் கோலி டிராவிஸ் ஹெட்டை முற்றிலும் புறக்கணித்துவிட்டுச் சென்றார்.
கேமராவில் பதிவான இந்தத் தருணத்தின் போது, பின்னணியில் இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சி ஊழியர்களும் மாற்று ஆட்டக்காரர்களும் திகைப்படைந்து, வெளிப்படையாக ஆச்சரியத்தை வெளிப்படுத்திய முகபாவனைகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Look at the way Travis Head went to shake hands with Virat Kohli, but Kohli did not shake hands with him back. Seriously, what happened between them? 👀
I have always seen both of them sharing a good bond during international cricket and even in the IPL. pic.twitter.com/lTrCYyIL20
— Sonu (@Cricket_live247) May 23, 2026
“>
சோசியல் மீடியாக்களில் இந்தத் தருணத்தின் ஸ்கிரீன்ஷாட்களும் மீம்களும் வெள்ளமெனப் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
