கடந்த 2025ஆம் ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வென்று, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனை படைத்தது. சொந்த மண்ணில் மகுடம் சூடிய இந்த பிரம்மாண்ட வெற்றி, வீராங்கனைகள் தங்களது திறமையை மேலும் மெருகேற்றி, அடுத்தடுத்த போட்டிகளில் மிகச் சிறப்பாகச் செயல்பட புதிய உத்வேகத்தையும் அசுர பலத்தையும் தந்துள்ளது.

​இதுகுறித்து பிசிசிஐ (BCCI) வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், “வெற்றி என்பது ஒரு போதை போன்றது. ஒருமுறை உலகக் கோப்பையை வென்றுவிட்டால், மீண்டும் அந்த மகுடத்தைத் தக்கவைக்க வேண்டும் என்ற வெறி இயல்பாகவே வந்துவிடும்” என நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். உலகக் கோப்பையை வென்ற கையோடு, அடுத்தடுத்த தொடர்களிலும் எதிரணிகளைத் துவம்சம் செய்ய இந்திய மகளிர் அணி புதிய வெறியுடன் தயாராகி வருகிறது.