நடப்பு ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியின் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி, அணியினருடன் பேருந்தில் பயணம் செய்தபோது எடுத்த சுவாரசியமான எக்ஸ்பிரஷன் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.

14 வயதே ஆன இந்த இளம் கிரிக்கெட் சென்சேஷன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சக வீரர்களுடன் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, தனது மொபைல் போனைப் பார்த்துள்ளார்.

அப்போது போனில் ஏதோ ஒரு விஷயத்தைப் பார்த்த அவர், தனது கண்களைப் பெரிதாக்கி, ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று கொடுத்த மிரட்சியான ரியாக்சன் அப்படியே கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த எமோஷனல் மற்றும் வேடிக்கையான வீடீயோவின் கிளிப்களும், ஸ்கிரீன்ஷாட்களும் தற்போது எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.

இதைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள், “அப்படி போனில் எதைப்பார்த்து நம்ம தம்பி இந்த ரேஞ்சுக்கு ஷாக் ஆகியிருப்பார்?” என்று விதவிதமாகக் கமெண்ட் செய்து ஜாலியாகக் கலாய்த்து வருகின்றனர்.

மைதானத்தில் பயமே இல்லாமல் சிக்ஸர், பவுண்டரிகளைப் பறக்கவிடும் வைபவ் சூர்யவன்ஷியின் இந்த எதார்த்தமான, மழலை மாறாத மறுபக்கத்தைக் காட்டும் இந்த வீடியோ, தற்போதைய ஐபிஎல் சீசனில் ரசிகர்களின் ஃபேவரிட் வைரல் வீடியோவாக மாறியுள்ளது.