இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் விராட் கோலிக்கு சமூக வலைத்தளத்தில் ஓப்பனாக ப்ரோபோஸ் செய்து அன்று உலக அளவில் வைரலான இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை டானி வியாட் (Danni Wyatt) வீட்டிற்கு தற்போது ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ள செய்தி, விளையாட்டு உலகிலும் சமூக வலைத்தளங்களிலும் செம வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து வீராங்கனையான டானி வியாட் மற்றும் அவரது பெண் பார்ட்னரான ஜார்ஜி ஹாட் (Georgie Hodge) ஆகிய ஓரினச்சேர்க்கை (Lesbian) தம்பதியினர், தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் முதல் புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by We Are England Cricket (@englandcricket)

டானி வியாட் கடந்த 2014-ஆம் ஆண்டு தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “கோலி, என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று பதிவிட்டு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிரவைத்தார். அதன் பிறகு விராட் கோலி அவருக்கு ஒரு கிரிக்கெட் பேட்டை பரிசளித்ததும் பெரும் பேசுபொருளாக மாறியது.

இதனைத் தொடர்ந்து, கால்பந்து ஏஜென்டாகப் பணிபுரியும் ஜார்ஜி ஹாட் என்ற பெண்ணை டானி வியாட் நீண்ட நாட்களாகக் காதலித்து, கடந்த 2024 டி20 உலகக்கோப்பை தொடரின் போது முறைப்படி திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து, டானி வியாட்டின் பார்ட்னர் ஜார்ஜி ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

தங்களது குட்டி இளவரசிக்கு ‘டெய்ஸி ஜேம்ஸ் வியாட் ஹாட்’ (Daisy James Wyatt Hodge) என்று பெயரிட்டுள்ளதாக இந்தத் தம்பதி அறிவித்துள்ளனர்.

இவர்களது நெகிழ்ச்சியான பதிவிற்கு உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தொடர்ந்து குவித்து வருகின்றனர்.