ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், விராட் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட் இடையேயான மோதல் முற்றியுள்ளது.
இப்போட்டியில் ஹைதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போதிலும், ஆட்டத்திற்குப் பின் இரு நாட்டு நட்சத்திர வீரர்களுக்கிடையே நிலவிய கடும் பதற்றம் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. போட்டியின் போது டிராவிஸ் ஹெட்டை பந்துவீச வருமாறு விராட் கோலி சைகை காட்டி சீண்டிய நிலையில், பின்னர் பந்துவீச வந்த ஹெட், அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ரஜத் படிதாரின் விக்கெட்டை வீழ்த்தி பதிலடி கொடுத்தார்.
இதன் தொடர்ச்சியாக, போட்டி முடிந்த பின்னர் இரு அணிகளின் வீரர்களும் கைகுலுக்கிக் கொள்ளும் வழக்கமான நிகழ்வின் போது, விராட் கோலி சக வீரர்களான பேட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா ஆகியோருடன் கைகுலுக்கி விட்டு, தனக்கு நேரே வந்த டிராவிஸ் ஹெட்டை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டுச் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Virat Kohli didn’t shake hands with Travis Head after the match ended. pic.twitter.com/74UEXm1aUV
— Cricketopia (@CricketopiaCom) May 22, 2026
“>
Who saw that coming? 😮
Travis Head with a #TATAIPL wicket after 9️⃣ years 🧡
Updates ▶️ https://t.co/ZcxjefgalG#KhelBindaas | #SRHvRCB | @SunRisers pic.twitter.com/qoYMUF0ADe
— IndianPremierLeague (@IPL) May 22, 2026
