கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள புனலூர் பகுதியில் நடந்த ஒரு கொடூர கொலைச் சம்பவம் தென்மாநிலங்களையே அதிர வைத்துள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஈசாக் (42) என்பவர் தனது மனைவி ஷாலினியை (39) சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.
இக்கொலையைச் செய்த கையோடு, தனது முகநூல் (Facebook) பக்கத்தில் நேரலையில் தோன்றி, “நான் என் மனைவியைக் கொன்றுவிட்டேன்” என வாக்குமூலம் அளித்துவிட்டு தப்பி ஓடினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரள போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கினர்.
தப்பிச் சென்ற ஈசாக்கை சில மணி நேரங்களிலேயே போலீசார் மடக்கிப் பிடித்தனர். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகமே இந்த கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சினிமா பாணியில் நடந்த இந்த கொடூரமும், அதைத் தொடர்ந்து நடந்த மின்னல் வேக கைதும் இப்போது கேரளாவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
