வாழ்க்கையில் ஒருமுறை தோற்றுவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைப்பவர்களுக்கு மத்தியில், ரோஹித் குமாரின் கதை ஒரு மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது. ஒரு காலத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவே திணறிய ரோஹித் குமார், இன்று ஒரு கல்விப் புரட்சியையே ஏற்படுத்தி வருகிறார்.
வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தபோது, அவரது தாய் மாட்டுச் சாணத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு இவரைப் படிக்க வைத்தார்.
He once struggled to pass Class 10.
Today, 1,000 students climb to his rooftop classroom at 5 a.m. 💛 From charging ₹125 and teaching four children to building a movement that challenges rote learning,Rohit Kumar turned doubt into determination. His mother once sold cow dung… pic.twitter.com/TUXsOpRRou
— Comman Man (@CommanMan777589) May 1, 2026
தனது தாயின் தியாகத்தையும், கல்விக்காக தான் பட்ட கஷ்டத்தையும் உணர்ந்த ரோஹித், வெறும் நான்கு மாணவர்களுக்கு 125 ரூபாய் கட்டணத்தில் பாடம் சொல்லிக்கொடுக்கத் தொடங்கினார்.
மனப்பாடம் செய்யும் கல்வி முறையை எதிர்த்து, புரிந்து படிக்கும் மாற்றத்தை விதைத்த இவரது திறமையைக் கண்டு, இன்று அதிகாலை 5 மணிக்கே 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவரது வீட்டு மொட்டை மாடி வகுப்பறையில் தவம் கிடக்கின்றனர்.
மார்க் மட்டுமே ஒருவரது வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை என்பதையும், விடாமுயற்சி இருந்தால் சாதாரண மனிதனும் சரித்திரம் படைக்கலாம் என்பதையும் ரோஹித் குமார் உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறார். தனது மகன் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அறிவொளி ஊட்டுவதை அந்த தாய் இன்று பெருமிதத்துடன் பார்த்து மகிழ்கிறார்.
