
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் தற்போது தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் 3 பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் நடிகர் விக்ரம் இந்த சம்பவத்திற்கு மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தப் பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் உதவி செய்துள்ளார். அதன்படி ரூபாய் 20 லட்சத்தை நிவாரணத்திற்காக கொடுத்துள்ளார்.