
கேரளாவில் கடந்த சில நாட்களாக வெஸ்ட் நைல் மற்றும் டெங்கு போன்ற பரவும் நோய்களால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழக எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உலக மக்கள் தொகையில் 80 சதவீதம் பேருக்கு கொசுக்கள், ஈக்கள் மற்றும் பூச்சிகள் மூலம் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் கொசுவலைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.