குடியிருப்புப் பகுதி ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள செக்யூரிட்டி ஒருவர், கொசுக்களின் தொல்லையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளப் கையாண்ட வினோதமான முறை சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. பணியின் போது கொசுக்கடியால் அவதிப்பட்ட அவர், ஒரு பெரிய கொசுவலையைத் தனக்கு மேலாகப் போர்த்தி, அதற்குள்ளேயே அமர்ந்து கொண்டு தனது பணியைத் தொடர்ந்துள்ளார்.

​இது குறித்த காணொளி எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி, இணையவாசிகளிடையே வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. செக்யூரிட்டியின் இந்தச் சமயோசித புத்தியைப் பாராட்டியும், அவர் அமர்ந்திருக்கும் தோற்றத்தை வேடிக்கையாக விமர்சித்தும் பலரும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்தச் சிறு காணொளி தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் ரீச் பெற்று வைரலாகி வருகிறது.