ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். மது கடை மேலாளரை கொலை செய்த வழக்கில் ஸ்ரீகாந்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து தப்பி ஓடிய ஸ்ரீகாந்த்தை 2018-ஆம் ஆண்டு காவல்துறையினர் மீண்டும் பிடித்து சிறையில் அடைத்தனர்.
சமீபத்தில் ஸ்ரீகாந்தை நெல்லூர் மாவட்ட சிறை அதிகாரிகள் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஸ்ரீகாந்த் போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கி நடந்து சென்றார்.
அப்போது ஒரு இருசக்கர வாகனம் மோதி அவரது கை உடைந்ததால் நெல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விதிமுறைகளின் படி சிகிச்சையில் இருந்த ஸ்ரீகாந்த்தை யாரும் சந்திக்க கூடாது. ஆனால் சிகிச்சையில் இருந்த போது ஸ்ரீகாந்த் தனது காதலி அருணாவை வரவழைத்து அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சில முக்கிய தலைவர்கள் உதவியுடன் ஸ்ரீகாந்த் பரோல் பெற முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
