மகாராஷ்டிரா மாநிலம் சதாரா நகரில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலை சோதனையில் பணியில் இருந்த பெண் போக்குவரத்து காவலர் பாக்யஸ்ரீ ஜாதவ், ஒரு ஆட்டோவை நிறுத்தச் சொன்னார். குடிபோதையில் இருந்த ஓட்டுநர் தேவ்ராஜ் காலே, தண்டிக்கப்படுவோம் என்ற பயத்தில் ஆட்டோவை நிறுத்தாமல் தப்பிக்க முயன்றார்.
இதனால், அந்த ஆட்டோ பெண் காவலரை சுமார் 120 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. இதில் காவலர் காயமடைந்தார். சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Satara: Woman cop dragged by drunk auto driver. pic.twitter.com/Zf38EyIr0r
— Viral Info (@3Chandrayaan) August 19, 2025
“>
தொடர்ந்து, பொதுமக்கள் விரைந்து சென்று ஆட்டோவை நிறுத்தினர். காவலரை மீட்டு, ஓட்டுநரை தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் தேவ்ராஜ் காலே கைது செய்யப்பட்டார். தற்போது காயமடைந்த பாக்யஸ்ரீ ஜாதவ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
