தெலுங்கானாவில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா கொண்டாட்டங்களின்போது ஏற்பட்ட மின் விபத்துகளில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மற்றும் காமாரெட்டி மாவட்டங்களில் நடந்த இந்த துயர சம்பவங்கள் பண்டிகை மகிழ்ச்சியை துக்கமாக மாற்றியுள்ளன.
ஐதராபாத் ஆம்பர்பேட்டை பகுதியில் விநாயக மண்டபம் அமைக்கும்போது ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதேபோல், பந்தலகுடா பகுதியில் விநாயகர் சிலையை தூக்கிச் சென்றபோது மின்கம்பி உரசியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு சம்பவத்தில், ராமந்தப்பூரில் கிருஷ்ணர் தேரை இழுத்தபோது மின்கம்பி உரசியதில் 5 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
Be careful ⚠️ while shifting big Ganesh Idols, as heavy rains lashes in #Hyderabad
Three persons were seriously injured due to #Electrocution while shifting a big #GaneshIdol with the help of a tractor when it came in contact with overhead high tension electricity wires, at… pic.twitter.com/wuiRcZG4o1
— Surya Reddy (@jsuryareddy) August 19, 2025
காமாரெட்டி மாவட்டத்தின் ஆரேபள்ளி பகுதியில், விநாயகர் சிலையை தூக்கிச் சென்ற லட்சுமி நாராயணா ( 25) என்பவர் மின்கம்பி உரசி உயிரிழந்தார். இரண்டு நாட்களில் 9 பேர் மின் விபத்தில் பலியான இந்த சோக சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
பண்டிகை கொண்டாட்டங்களின்போது மின்கம்பிகள் மற்றும் மின்சார பாதுகாப்பு குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பாக பண்டிகைகளை கொண்டாடி மகிழ, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறது.
