ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஆதார் கார்டு முகவரி மாற்றப் படிவத்தில், மருத்துவரின் கையொப்பத்தைப் பெற்றுத் தருவதற்காக ஒப்பந்தப் பணியாளர் ஒருவர் பொதுமக்களிடம் ₹300 லஞ்சம் கேட்கும் அதிரடி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ஏழை எளிய மக்கள் வரும் அரசு மருத்துவமனையில், ஒரு சின்ன கையெழுத்துக்கு இப்படி ஓப்பனாகப் பணம் கேட்டு அவர் பேரம் பேசும் காட்சி நெட்டிசன்களைக் கொந்தளிக்க வைத்தது.

​இந்த லஞ்ச வீடியோ இணையத்தில் தீயாய் வைரலாகி அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்திய நிலையில், அதிகாரிகள் உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். லஞ்சம் கேட்டு சிக்கிய அந்த ஒப்பந்தப் பணியாளரை ஈரோடு அரசு மருத்துவமனை நிர்வாகம் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளது. வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே பாய்ந்த இந்த ஆக்ஷன் நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.