மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் ராணுவ வீரர் நடனமாடி கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பல்வேந்தர் சிங் சாப்ரா என்பவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்து ஊரில் கிராந்தி யோகா நிகழ்ச்சியில் பல்வேந்தர் சிங் இராணுவ உடையில் தேசபக்தி பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தார்.

கையில் மூவர்ண கொடியுடன் நடனமாடி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்த நிலையில் அவர் பாவனை செய்வதாக நினைத்து மக்கள் கைதட்டினர். ஆனால் சிறிது நேரம் கழித்தும் கண் விழிக்காததால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக கூறினார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.