கேரளப் பிரபலங்களில் இன்ஸ்டாகிராமில் அதிகப் பின்தொடர்பாளர்களைக் கொண்டவர் என்ற புதிய சாதனையை கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்த பிரபல நடிகை கீர்த்தி சுரேஷை முந்தி அவர் இந்த இலக்கை எட்டியுள்ளார். தற்போது சஞ்சு சாம்சனை சுமார் 1.9 கோடி ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக சஞ்சு சாம்சனின் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 1.4 கோடியாக மட்டுமே இருந்தது. ஆனால் அந்தத் தொடரில் அவர் வெளிப்படுத்திய அபாரமான ஆட்டத்தால் ரசிகர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இதன் மூலம்1.88 கோடி ஃபாலோயர்ஸ்களைக் கொண்டுள்ள கீர்த்தி சுரேஷைப் பின்னுக்குத் தள்ளி, சஞ்சு சாம்சன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்