தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தங்கள் கூட்டணி மற்றும் கட்சியின் வெற்றி குறித்து அதீத நம்பிக்கையுடன் அதிரடி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பார் என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, “நாங்கள் 10 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளோம்; கேப்டன் விஜயகாந்தின் ஆசீர்வாதத்துடன் அந்த 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, நாங்கள் 10 பேரும் கம்பீரமாகச் சட்டசபைக்குச் செல்வோம்” என பிரேமலதா நம்பிக்கைத் ததும்பக் கூறியுள்ளார்.

கேப்டன் இல்லாத முதல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் தேமுதிக, இந்த முறை சட்டசபையில் தனது முத்திரையைப் பதிக்கத் தயாராகி வருவது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.