உத்தரப்பிரதேச மாநிலம் தேவ்ரியாவில், பெட்ரோல் பங்க் ஒன்றில் நடந்த சுவாரசியமான சம்பவம் இப்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நிர்வாகக் காரணங்களால் கேன்களில் டீசல் அல்லது பெட்ரோல் வழங்கக்கூடாது என்று அங்குள்ள அதிகாரிகளால் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் தனது வேலையை முடிக்கத் தேவையான டீசலை வாங்க முடியாமல் அந்தப் பகுதி மக்கள் தவித்தனர்.
ஆனால், ஒரு இளைஞர் மட்டும் சற்றும் யோசிக்காமல் ஒரு விசித்திரமான முடிவை எடுத்தார். கேனில் டீசல் தரமாட்டார்கள் என்பதால், டீசல் தேவைப்படும் தனது பெரிய ஜெனரேட்டரையே நேரடியாக இழுத்துக்கொண்டு பெட்ரோல் பங்கிற்கே வந்துவிட்டார்! இதைப் பார்த்த பங்க் ஊழியர்களும் பொதுமக்களும் ஒரு நிமிடம் வாயடைத்துப் போயினர்.
सख्ती के बीच युवक का अनोखा जुगाड़, जनरेटर लेकर पहुंच गया पेट्रोल पंप
यूपी के देवरिया में अनोखा नजारा देखने को मिला, जब प्रशासन की सख्ती के बीच एक युवक जनरेटर लेकर पेट्रोल पंप पर पहुंच गया और उसी में डीजल भरवाया. अब सोशल मीडिया पर वायरल हो रहा है वीडियो.#PetrolPanic #ViralVideo… pic.twitter.com/xNzSasvqAo
— NBT Hindi News (@NavbharatTimes) March 27, 2026
விதிமுறைகளை மீறாமல், அதே சமயம் தனது வேலையையும் சாதித்த அந்த இளைஞரின் இந்த புத்திசாலித்தனமான ‘ஜுகாட்’ ஐடியா இப்போது இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
