சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், குடிபோதையில் இருந்த தந்தை ஒருவர், தனது கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு கடலில் எழும் ஆக்ரோஷமான அலைகளுக்கு நடுவே செல்கிறார். போதையில் தள்ளாடிய அவர், அலைகளின் வேகத்தைக் கூட உணராமல் குழந்தையை ஆபத்தில் தள்ளியது பார்ப்பவர்களைப் பதற வைத்தது.

இதைக் கண்ட அவரது மனைவி, குழந்தையைத் திருப்பித் தருமாறு கதறி அழுதார். ஆனால், அந்த நபர் ஒரு ஜோக்கரைப் போலச் சிரித்துக் கொண்டே எதையும் காதில் வாங்காமல் பிடிவாதம் பிடித்தார். ​ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த அந்தத் தாய், தன் குழந்தையைக் காப்பாற்ற துணிச்சலுடன் கடலுக்குள் இறங்கினார். தன் கணவன் என்றும் பாராமல், போதையில் இருந்த அவரிடம் இருந்து குழந்தையைப் பிடுங்கிவிட்டு, அவருக்கு அங்கேயே தர்ம அடி கொடுத்தார்.

மகனைப் பாதுகாக்க ஒரு தாய் எடுத்த இந்த அதிரடி முடிவும், அவரது தைரியமும் இப்போது இணையத்தில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. போதையில் குடும்பத்தை நடுத்தெருவுக்குக் கொண்டு வரும் கணவர்களுக்கு இந்தப் பெண்ணின் அதிரடி ஒரு தகுந்த பாடம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.