இந்தியாவின் தெருவோர உணவான ‘பெல் பூரி’ (Bhelpuri) விற்பனை செய்யும் ஒரு வியாபாரி, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவரிடம் காட்டிய அநியாயமான விலை இப்போ சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பிளேட் பெல் பூரியின் விலை வெறும் 30 அல்லது 50 ரூபாய்தான் இருக்கும் நிலையில், அந்தப் பயணியின் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தி அந்த வியாபாரி 500 ரூபாய் எனக் கேட்டுள்ளார்.
ஆனாலும், அந்தப் பயணி உஷாராகத் தனது மொபைலில் இருந்த ‘சாட் ஜிபிடி’ (ChatGPT) செயலியில் அந்த உணவின் சராசரி விலையைச் சரிபார்த்துள்ளார். “இந்தியாவில் பெல் பூரியின் விலை என்ன?” எனக் கேட்ட அடுத்த விநாடியே, அது உண்மையான விலையைக் காட்டி அந்த வியாபாரியின் முகத்திரையைக் கிழித்துள்ளது. மாட்டிக்கொண்ட பிறகும் எவ்விதக் கூச்சமும் இல்லாமல், வாங்கிய அதிகப்படியான பணத்தைத் திருப்பித் தர மறுத்த அந்த வியாபாரி, கேமராவைப் பார்த்து நக்கலாகச் சிரித்ததுதான் காண்போரை இன்னும் ஆத்திரமடையச் செய்துள்ளது.
"Indian scammed a foreigner." 😡
"Chat GPT exposed it within seconds."🔥
A vendor charged a tourist ₹500 for a plate
of BHELPURI street food but tourist checked price on ChatGPT and exposed the scam.Shamefully, the vendor did not return the extra money. He just kept smiling. pic.twitter.com/dqVT7YpiFA
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) March 27, 2026
“இப்படியெல்லாம் ஏமாற்றினால் இந்தியாவுக்குச் சுற்றுலாப் பயணிகள் எப்படி வருவார்கள்?” என நெட்டிசன்கள் அந்த வியாபாரியை வறுத்தெடுத்து வருகின்றனர். தொழில்நுட்பம் இப்போ ஏமாற்றுக்காரர்களைக் கண்டுபிடிக்கவும் எவ்வளவு உதவியா இருக்குங்கிறதுக்கு இது ஒரு சிறந்த உதாரணம்!
