கோயம்புத்தூர் மாவட்டத்தில் 45 வயது பெண் காவலர் ஒருவரை அலுவலக அறையில் வைத்தே சிறப்பு ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இவருக்கு உதவி பெண் ஆய்வாளர் ஒருவர் உடந்தையாக இருந்தது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது பாஜக கட்சியின் முக்கிய தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திறனற்ற திமுக ஆட்சியில் காமுகர்களாக மாறிய காவலர்கள்!
கோவையில் காவல் நிலைய அலுவலக அறையில் வைத்தே பெண் காவலரை மதுக்கரை சிறப்பு காவல்துறை கமாண்டண்ட் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
“வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்று போலியாக…
— Nainar Nagenthran (@NainarBJP) March 15, 2026
அதன்படி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூரில் பெண் போலீசை அதிகாரி ஒருவரை பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. வெல்லும் தமிழ் பெண்கள் என்று திமுக போலியாக முழங்கும் நிலையில் தெருவோரம் காமுகர்கள் ஒரு புறம் பெருகிவர தற்போது காவல் அதிகாரிகளை காமுகர்களாக மாறுவது பெண்கள் பாதுகாப்பை ஒட்டுமொத்தமாக கேள்விக்குறியாகி உள்ளது. வீட்டில் உறங்கும் பச்சிளம் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை காவல் நிலையத்தில் காக்கி உடையில் இருக்கும் பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை. தமிழக வரலாற்றில் இப்படி ஒரு கொடூரத்தை யாரும் பார்த்தது கிடையாது. மேலும் இனி இந்த கேடுகெட்ட திமுக ஆட்சி தொடரப்போவது கிடையாது என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
