தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 45 வயது பெண் காவலர் ஒருவரை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் என்பவர் அலுவலக அறையில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதற்கு பாஜக கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன்படி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேடுகெட்ட ஆட்சியை விரைவில் மக்கள் தூக்கி எறிவார்கள். தமிழக வரலாற்றில் இப்படி ஒரு கொடூரத்தை யாரும் பார்த்தது கிடையாது. திமுக ஆட்சியில் போலீஸ்காரர்களே காம கொடூரர்களாக மாறும் நிலையில் தெருகளிலும் காமுகர்கள் பெருகி வருகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டம் கோவை புதூரில் உள்ள, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை அதிகாரி செந்தில்குமார், பெண்காவலரை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியதால், இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழகம் முழுவதும், பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழலில், பெண் காவலரே பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்போதும், காவல்துறை அதிகாரியே இதனைச் செய்திருப்பதும், திமுக ஆட்சியில் தமிழகம் எத்தனை அவலநிலையில் இருக்கிறது என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது. திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை.

பெண் காவலருக்கு, காவல்நிலையத்திலேயே பாதுகாப்பில்லாமல் இருக்கும்போது, கையாலாகாத திமுக ஆட்சியில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக உணர்வார்கள் என்று பதிவிட்டுள்ளார்.கோவையில் மதுக்கரை சிறப்புக் காவல் கமாண்டண்ட் அதிகாரி ஒருவர் பெண் காவலரை காவல் நிலைய அலுவலத்தில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் லட்சணத்தைப் பட்டவர்த்தனமாக்குகிறது.

காவலராகப் பணிபுரியும் பெண்ணின் பாதுகாப்பைக் காவல் நிலையத்தில் வைத்தே உறுதி செய்ய இயலாத திறனற்ற திமுக ஆட்சி எப்படி ஒரு சாதாரண பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யும்? வெல்வதை விடுங்கள், இந்த ஆட்சியில் எப்படி ஒரு பெண் நிம்மதியாக வாழ முடியும்?

சட்டம் ஒழுங்கை சரிசெய்ய இயலாத @arivalayam ஆட்சியில், பெண்கள் மடிந்ததும், துடித்ததும் போதும்! விடியா திமுக அரசை விரட்டியடிப்போம்! தமிழக மகளிரைக் காப்போம் என்று பதிவிட்டுள்ளார்.