பாராளுமன்றத்தில் நடைபெற்ற கேள்வி நேரத்தில், எம்.பிக்கள் கிரிதாரி யாதவ் மற்றும் தினேஷ் சந்திரா யாதவ் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌதரி, 2023–24 நிதியாண்டுக்கான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின்  மாநில உள்நாட்டு வருமானம் (Per Capita Net State Domestic Product – NSDP) குறித்து தகவல் வழங்கினார்.

இதன்படி நாட்டில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது. அங்கு 2024-2025-ம் ஆண்டு தனிநபர் வருமானம் ரூ.2,04,605 ஆக இருந்தது. 2-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.

தேசிய புள்ளிவிவர அலுவலகம் (NSO) வெளியிட்ட தற்காலிக தரவுகளின் அடிப்படையில், தனிநபர்   வருமானத்தில் (Per Capita Income) இந்தியாவில் கோவா முதலிடத்தில் உள்ளது. கோவாவின் தனிநபர் வருமானம் ரூ.3,57,611 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சிக்கிம் (₹2,92,339), டெல்லி (₹2,71,490), சண்டிகர் (₹2,56,912), புதுச்சேரி (₹1,45,921) ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இடம் பெற்றுள்ளன.

மாறுபட்ட பொருளாதார வளர்ச்சி, தொழில் துறைகளின் விகிதாசாரம், நிர்வாக செயல்திறன், மற்றும் அமைப்புசார் வேறுபாடுகள் காரணமாக மாநிலங்களுக்கிடையே வருமானத்தில் பெரும் இடைவெளி காணப்படுவதாக மந்திரி கூறினார்.

இதன்படி நாட்டில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது. அங்கு 2024-2025-ம் ஆண்டு தனிநபர் வருமானம் ரூ.2,04,605 ஆக இருந்தது. 2-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.

தனிநபர் வருமானத்தில்   1, கர்நாடகம் (₹1.91 லட்சம்) 2, தமிழ்நாடு (₹1.79 லட்சம்) மற்றும் தெலுங்கானா (₹1.77 லட்சம்) ஆகியவை மிகச் சிறந்த வளர்ச்சி பெற்றுள்ளன. ஆனால் பிகார் (₹32,227), உத்தரப்பிரதேசம் (₹50,341) மற்றும் ஜார்க்கண்ட் (₹65,062) ஆகிய மாநிலங்கள் மிகக் குறைவான வருமானத்துடன் பட்டியலின் கடைசி பகுதியில் உள்ளன.

இந்த தனிநபர் வருமான வேறுபாடுகள் குறித்து பேசும் பொருளாதார நிபுணர்கள், “இந்த தகவல் அரசியல் நிர்வாகத்துக்கு ஒரு விழிப்புணர்வு சைகை. மண்டல அடிப்படையிலான வளர்ச்சி இடைவெளிகளை சமப்படுத்த தவறினால், நீண்ட காலத்தில் உள்ளடக்கிய வளர்ச்சி சாத்தியமில்லை” எனக் கூறுகின்றனர்.

இந்நிலையில், மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு இணைந்து, பின்தங்கிய மாநிலங்களில் முதலீடு, தொழில்துறை வளர்ச்சி, கல்வி, உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்தும் திட்டங்களை வகுக்க வேண்டிய அவசியம் உண்டு என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.