உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூரில் இருந்து கரையைக் கடக்கும் ஒரு வேதனைக்குரிய சம்பவம் இணையத்தை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. பட்கானா மொஹல்லாவைச் சேர்ந்த நசீம் என்பவர், தனது 7 வயது மகன் ஜுனைத் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், தவறுதலாக வீட்டு மருந்து கொடுத்ததால் நிலை மோசமடைந்தது. அரசு மருத்துவமனையில் முதல்சிகிச்சைக்குப் பிறகு, சிறுவனை கான்பூர் ஹாலெட் மருத்துவமனைக்கு அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டது.
அதற்கான செலவுக்கான பணம் இல்லாத நசீமுக்கு, அக்கம் பக்கத்தினர் நன்கொடையாக ரூ.20,000 வரை கொடுத்து உதவினர். ஆனால் மிகப்பெரிய தடையாக யமுனை பாலம் முன் வந்தது. பழுதுபார்ப்பு காரணமாக மூடப்பட்டிருந்த பாலம் வாகனங்களை அனுமதிக்காததால், தந்தை நசீம் தனது மகனை மடியில் சுமந்து 900 மீட்டர் தொலைவு ஓடினார்.
பின்னர் ஒரு வாகனம் மூலம் கான்பூரை அடைந்தார். ஆனால் சிறுவனை உடனடியாக சேர்க்க மருத்துவமனை கிடைக்கவில்லை. கடைசியில் ஹாலெட் மருத்துவமனையில் அனுமதித்த போதும், குழந்தை உயிரிழந்தது.
उत्तर प्रदेश के हमीरपुर में एक पिता को अपने बीमार बेटे को इलाज के लिए 700 मीटर लंबा यमुना पुल पैदल पार करना पड़ा. पुल मेंटेनेंस के कारण वाहनों का आवागमन बंद था. देखिए वायरल वीडियो. pic.twitter.com/4hTdyaDIhz
— Abhishek Kumar (ABP News) (@pixelsabhi) July 22, 2025
“>
இந்த சம்பவம் சம்பந்தமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. தந்தையின் வேதனையை கண்டு வழிப்போக்கர்களும் கண்ணீர் விட்டனர். “பாலம் திறந்திருந்தால் என் மகனின் உயிரைக் காப்பாற்றியிருப்பேன்,” என தந்தை நசீம் கூறியிருப்பது நெஞ்சை நெகிழ வைக்கும்.
இதே பாலம் மூடப்பட்டதால் இதுவரை நான்கு உயிர்கள் தொலைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மக்கள் பாதுகாப்பை கருதி, விரைவாக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
