மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் அமைந்துள்ள பிர்லா மருத்துவமனையில் பெண் பாதுகாவலராக பணியாற்றிய 33 வயதுடைய திருமணமான பெண் ஒருவர், தனது மூத்த அதிகாரி நரேந்திர சிங் குர்ஜார் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளார். பணியின் போது பலமுறை தன்னை உடல் உறவில் ஈடுபட வற்புறுத்தி வந்ததாகவும், அவர் மறுத்த பிறகு வேலையை விட்டு தூக்கியதாகாவும்   அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் ஜான்சி சாலை பகுதியில் உள்ள நாகா சந்திரவத்னியில் வசித்து வரும் பெண் பாதுகாவலரின் புகாரின் அடிப்படையில் வெளியாகியுள்ளது. நரேந்திரன் தொடக்கத்திலிருந்தே தவறான நோக்கத்துடன் நடந்துகொண்டதாகவும், “உடன்பட்டால் வேலை தொடர முடியும், இல்லை என்றால் நீக்கப்படும்” என அடிக்கடி எச்சரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், வேலைவிலக்குக்கு பிறகும் அந்த அதிகாரி தன்னை விருந்தினர் மாளிகையில் சந்திக்க அழைத்து தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இதுபற்றி பெண் தனது கணவரிடம் தெரிவித்ததையடுத்து,  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் நரேந்திர சிங் குர்ஜார் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354  மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அவர் தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பணிப்பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளது.