கேரள மாநிலத்தில் ஒரு ஐடி நிறுவன ஊழியர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் தமிழ் திரைப்பட நடிகை லட்சுமி மேனனின் நெருக்கமான நண்பர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மூவரில் ஒருவர், மிதுன் மோகன், முற்றிலும் பரபரப்பான பின்னணியைக் கொண்டவராக இருக்கிறார். அவர், பல்வேறு கடத்தல் மற்றும் தாக்குதல் வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், ஒரு கூலிப்படையைச் சேர்ந்தவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் நடிகை லட்சுமி மேனனும் தொடர்புடையவர் என சந்தேகம் ஏற்பட்டு, காவல்துறை விசாரணையில் முக்கிய முகமாக மாறியுள்ளார். அதனையடுத்து, செப்டம்பர் 17 வரை முன்ஜாமீன் பெற்றுள்ளார். கைதாகிய குற்றவாளிகளுடன் லட்சுமி மேனனின் தொடர்பு எவ்வாறு உருவானது, அவர்களுக்கிடையே நடந்த உரையாடல்கள், சந்திப்புகள், பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட தகவல்களை கொண்டு தற்போது போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு திரை உலகத்திலும் அதிர்ச்சியையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கி உள்ளது.