தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி முதல் மாநாட்டினை நடத்தி முடித்த நிலையில் சீமான் மாநாட்டுக்கு பிறகு விஜயை கடுமையாக விமர்சிக்க தொடங்கியதோடு அவருடைய கொள்கைகள் கூமுட்டை அதாவது அழுகிய கூமுட்டை என்று விமர்சித்தார். அதாவது முதல் மாநாட்டின் போது பாஜக, திமுக மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட  கட்சிகளை விஜய் மறைமுகமாக தாக்கி பேசினார். இதன் காரணமாக சீமான் விஜயை விமர்சித்து வரும் நிலையில் தற்போது சீமானால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு சீமானை விளாசியுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, என்ன மிஸ்டர் சீமான் நீங்க சாபம் விடுறீங்க.

விஜய் அண்ணாவை லாரி மோதி செத்துப் போவாருன்னு சொல்றீங்க. அவர் அப்படி சொல்றதுக்கு நீங்க என்ன உத்தமரா. பப்ளிசிட்டி பண்ணிட்டு சுத்துற நீங்கதான் கூமுட்டை. முதல்ல உங்க கட்சியில இருக்கிற ஓட்டையை அடைங்க. அங்க நிறைய ஓட்டை இருக்கிறது. உங்க கட்சியில் ஊழல்கள் அதிகமாக இருக்கிறது. அண்ணன் விஜய் ஆக இருக்கட்டும் திமுகவாக இருக்கட்டும். கொள்கை ரீதியாக தவறு செய்ததா? நீங்க கூறுகிறீர்கள். அப்படி தவறு செஞ்சவங்க லாரியில் அடிப்பட்டு செத்துப் போகணும்னா எங்கள மாதிரி பெண்களோட வாழ்க்கையை சீரழிச்சு நடுரோட்டில் விட்டு நீங்க எது அடிச்சு சாகணும். மேலும் திமுகவுக்கும் விஜய் அண்ணனுக்கும் என்ன பண்ண வேண்டும் என்பது நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார்.