விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் கூமாபட்டி எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகே பிளவக்கள் எனும் அணை இருக்கிறது. மண்வாசமும் இயற்கை சூழலும் நிறைந்த இந்த கிராமத்தை தங்கப்பாண்டி என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமாக்கினார். இவ்வாறு இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமடைந்த இந்த கிராமத்திற்கு வெளியூர் நபர்களும் வரத் தொடங்கினர். அதுமட்டுமின்றி கூமாபட்டி கிராமம் மூலம் பிரபலமடைந்த தங்கப்பாண்டி தற்போது தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
மேலும் இவருக்கு விளம்பர வாய்ப்புகளும் கிடைத்து வரக்கூடிய நிலையில், தற்போது தங்கப்பாண்டி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அதாவது சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு பஸ்ஸில் கூமாபட்டி கிராமத்திற்கு திரும்பி சென்றபோது விபத்து ஏற்பட்டு தங்கபாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது தங்கப்பாண்டிக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
