முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதில் தொடர்ந்து தாமதம் காட்டி வருவதால், அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள் பல்வேறு கட்சிகளுக்குத் திரும்பி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, ஓபிஎஸ்-ஸின் சொந்தத் தொகுதியான போடியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரும், கன்னிசேர்வைபட்டியைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளும் ஓபிஎஸ் முகாமிலிருந்து விலகி, தங்களைத் தாய்க்கட்சியான அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் கணிசமான எண்ணிக்கையிலான ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் தலைமையைப் ஏற்று அக்கட்சியில் இணைந்தனர். தேர்தல் நெருங்கும் வேளையில் ஓபிஎஸ்-ஸின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளிலேயே நிகழ்ந்துள்ள இந்த அணிமாற்றம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
