தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் சாதனையை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இன்று நிகழ்த்திக் காட்டியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கூட்டணியும் இல்லாமல் ‘சிங்கிளாக’ களம் இறங்கிய தவெக, வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி ஒரு கோடி வாக்குகள் (1 Crore Votes) என்ற பிரம்மாண்ட மைல்கல்லைக் கடந்து அசுர பலத்தை நிரூபித்துள்ளது. திராவிடக் கட்சிகளின் பலமான வாக்கு வங்கியைத் தகர்த்து, முதல் தேர்தலிலேயே ஒரு கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள “தளபதி” விஜய்யின் இந்த விஸ்வரூபம் அரசியல் ஜாம்பவான்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கூட்டணி பலம் இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு, தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தனது கொடியை ஊன்றி வரும் தவெக-வின் இந்த அசுர வளர்ச்சி, கோட்டையை நோக்கிய விஜய்யின் பயணத்தை இன்னும் உறுதிப்படுத்தியுள்ளது.