இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடிகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சைபர் கிரைம் தாக்குதல்கள் என்பது அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெக்ஸ்டாப் சிஸ்டம்களில் கூகுள் குரோம் பயனர்களுக்கு CERT – in எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. கூகுள் குரோம் இல் குறைபாடுகள் இருப்பதாகவும் அதனை பயன்படுத்தி ஹேக்கர்கள் சிஸ்டங்களை ஹேக் செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
குரோம் பிரவுசரில் சேமித்து வைத்திருக்கும் பாஸ்வேர்டுகள் போன்ற முக்கிய தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாகவும், Mac பயன்படுத்துபவர்கள் தங்களுடைய பிரவுசரை லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
