வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடந்த அந்த அதிர்ச்சிகரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, 31 வயதான கோல் டோமஸ் ஆலன் என்ற நபரை பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நெருக்கமாக இருக்கும் உயர் அதிகாரிகளைத் தான் குறிவைத்ததாக அந்த நபர் ஒப்புக்கொண்டிருப்பது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலிய தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் ‘பகீர்’ கிளம்பியது. குறிப்பாக, இஸ்ரேலில் துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பே இந்த ஆலனின் பெயர் கூகுளில் நூற்றுக்கணக்கான முறை தேடப்பட்டதாகக் கூறப்பட்ட தகவல், பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
Can we ask how and why the name of the shooter was searched hundreds of times in Israel a day before the incident ? https://t.co/mk2N21H2ia pic.twitter.com/xgn4Sj5FI2
— True Promise – الوعد الصادق ✪🇮🇷 (@IRTruePromise) April 26, 2026
“>
இருப்பினும், அந்தத் தகவல் வெறும் வதந்திதான் என்றும், துப்பாக்கிச் சூடு நடந்த பிறகே அவரது பெயர் இணையத்தில் வைரலானதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல், சந்தேக நபர் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் (IDF) சட்டையை அணிந்திருந்ததாக வெளியான புகார்களும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
“இது திட்டமிட்ட நாடகமா?” அல்லது “நிஜமான தாக்குதலா?” என இணையவாசிகள் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க, சிபிஎஸ் நியூஸ் மற்றும் எஃப்.பி.ஐ அதிகாரிகள் இந்தச் சம்பவத்தின் ஒவ்வொரு வேரையும் துருவித் துருவி ஆராய்ந்து வருகின்றனர். இந்த மர்ம நபர் எதற்காக அதிகாரிகளைத் குறிவைத்தார் என்ற உண்மை மட்டும் இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது.
