வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடந்த அந்த ‘பகீர்’ துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்பாக, வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கேரோலின் லெவிட் (Karoline Leavitt) அளித்த ஒரு பேட்டி இப்போது உலக அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு ஃபாக்ஸ் நியூஸிற்குப் பேட்டியளித்த அவர், “இன்று இரவு சில ஷாட்கள் ஃபையர் ஆகும் (Shots will be fired), அதனால் யாரும் இந்த நிகழ்ச்சியைத் தவறவிடாதீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

பொதுவாக அரசியலில் “Shots fired” என்பது ஒருவரது பேச்சில் இருக்கும் அதிரடி விமர்சனங்களைக் குறிக்கும் ஒரு சொல்லாடல் தான் என்றாலும், அவர் சொன்ன அடுத்த சில நிமிடங்களிலேயே நிஜமாகவே துப்பாக்கிச் சூடு நடந்ததால், இது திட்டமிட்ட சதியா? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

“>

நெட்டிசன்கள் பலரும், “துப்பாக்கிச் சூடு நடக்கப்போவது கேரோலினுக்கு முன்கூட்டியே தெரியுமா?” என்றும், “அரசியல் ஆதாயத்திற்காக ட்ரம்ப் தரப்பே இந்த நாடகத்தை அரங்கேற்றியதா?” என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் துப்பாக்கிதாரியின் புகைப்படத்தைப் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரோலினின் இந்த ‘தீர்க்கதரிசன’ வீடியோ எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது. 45 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஹோட்டலில் அதிபர் ரொனால்ட் ரீகன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட அதே வரலாறு இப்போது திரும்பியுள்ளது ஒருபுறமிருக்க, மறுபுறம் அமெரிக்க அரசு இயந்திரமே இந்த “முன்னறிவிப்பு” பேட்டியால் ஆடிப்போயுள்ளது.