இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் பகிரப்படுவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தினம்தோறும் இது போன்ற வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் குழந்தை ஒன்று பெட்டில் படுத்து கொண்டு சிணுங்கி கொண்டிருக்க அதனைப் பார்த்த பூனை குழந்தையை சமாதானப்படுத்த குழந்தையுடன் கொஞ்சி விளையாடுகிறது. தன்னுடைய கால்களால் முகத்தை தொட்டும் நாக்கால் குழந்தையின் மூக்கை நக்கியும் அழகாக விளையாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.