மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் நாலசோபரா கிழக்கில் உள்ள உயரமான குடியிருப்பு பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் 12வது மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஜூலை 22ஆம் தேதி இரவு 8.20 மணியளவில் நடந்த இந்த துயர சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்த சிறுமி, ஒரு எலக்ட்ரீஷியனின் மகளாவார். சம்பவத்தின் போது சிறுமி தனது பெற்றோருடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
வீட்டில் இருந்து கிளம்பும் தருணத்தில், சிறுமிக்கு காலணிகளை அணிவிக்க தாயார் முயன்றபோது, அவளை காலணி பெட்டியில் நிற்க வைத்துள்ளார். ஆனால், அந்த பெட்டியின் பின்புறம் திறந்த இடம் இருந்ததால், சமநிலையை இழந்த சிறுமி நேராக மாடியில் இருந்து விழுந்துவிட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், வழியிலேயே உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
#INDIA: #Maharashtra: Tragic accident in #Vasai
Mother made her 4 year old daughter sit near the window… she lost her balance and fell from the 12th floor #died on the spot.
The entire incident was captured on CCTV, people were shocked after watching the video. pic.twitter.com/ele0fiv9En— CMNS_Media⚔️ #Citizen_Media🏹VEDA 👣 (@1SanatanSatya) July 25, 2025
“>
இந்த சம்பவம் தொடர்பாக நைகான் காவல் நிலையத்தில் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் விபத்தானது என்றும், யாரையும் குற்றவாளியாகக் கருதவில்லை என்றும் தந்தை அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இந்த சம்பவம், உயர கட்டிடங்களில் சிறுவர் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒருமுறை கேள்விகள் எழுப்பும் விதமாக அமைந்துள்ளது.
