குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு மத்திய தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்துவதை ஆணையம் தடை செய்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்துவதற்கு எதிரான எச்சரிக்கை, 2016இல் திருத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1986க்கு இணங்க வேண்டிய கடமையை அனைத்து  கட்சிகளுக்கும் ஆணையம் நினைவூட்டியது.

அதாவது, தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள்/துண்டறிக்கைகள் விநியோகம், கோஷங்கள் எழுப்புதல், பிரச்சாரக் கூட்டங்கள், தேர்தல் கூட்டங்கள் போன்ற தேர்தல் தொடர்பான எந்த விஷயத்திலும் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.