குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ராணிப் பகுதியில், கடந்த மார்ச் 22-ஆம் தேதி தசரத் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மனைவியின் கள்ளத்தொடர்பு மற்றும் பண மோசடியால் ஏற்பட்ட மன உளைச்சலே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மனைவி பகவதியை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

தற்கொலைக்கு முன்னதாக தசரத் தனது செல்போனில் 6 நிமிட வீடியோ ஒன்றையும், 2 பக்க தற்கொலை கடிதத்தையும் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ள புகார்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. எனது மனைவி பல ஆண்களுடன் தொடர்பில் இருந்தார். குழந்தைகளை ஹாலில் டிவி பார்க்க வைத்துவிட்டு, பெட்ரூமில் தனது கள்ளக்காதலனுடன் இருப்பார். தனது கள்ளக்காதலை மறைக்க வேறொருவர் பெயரில் சிம் கார்டு வாங்கி 2 ஆண்டுகளாக செல்போனை மறைத்து வைத்திருந்தார்.

எல்லாவற்றையும் மன்னித்து நான் அவளை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தேன். இதற்காக 25 லட்ச ரூபாய் செலவு செய்தேன். ஆனால், அவள் வீட்டின் நகைகளை அடகு வைத்து பணத்தை ஊதாரித்தனமாகச் செலவு செய்ததோடு, ஒரு வருடம் குழந்தைகளைப் பள்ளிக்குக் கூட அனுப்பவில்லை. தான் செய்த தவறுகளை மறைக்க, அடிக்கடி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டி வந்துள்ளார். இறுதியில் தனது சகோதரர்களுடன் அவர் வீட்டை விட்டுச் சென்றதால், மனமுடைந்த தசரத் தற்கொலை செய்துகொண்டார்.

முன் ஜாமீன் வேண்டி பகவதி தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில், அவர் தனது கிராமத்திற்குத் தப்பி ஓடினார். இந்நிலையில், அவர் அகமதாபாத் பேருந்து நிலையத்திற்கு வருவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் போலீஸார் அங்கு மறைந்திருந்து அவரை கைது செய்தனர். தற்போது அவரது செல்போனைப் பறிமுதல் செய்துள்ள போலீஸார், தசரத்தின் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள மகேஷ், லாசிபென், பிகாபாய் மற்றும் சுரேகா ஆகியோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பெண்ணின் பேராசையும், முறையற்ற உறவும் ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தையே சிதைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.