இன்ஸ்டாகிராமில் ஒரு மருத்துவர் குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்துவது பற்றி ஒரு காணொளியில் விளக்கியுள்ளார். அவர் கூறுகையில், குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்தலாம், ஆனால் அதன் வெப்பநிலை 24 முதல் 26 டிகிரி செல்சியஸுக்கு இடையே மட்டுமே இருக்க வேண்டும். மேலும், ஏசி அறையில் காற்று புழக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக, மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கதவு அல்லது ஜன்னலைத் திறந்து வெளிக்காற்று உள்ளே வர அனுமதிக்க வேண்டும். இது குழந்தைகளுக்கு புதிய காற்று கிடைப்பதை உறுதி செய்யும்.

அதோடு, ஏசியின் பில்டரை ஒவ்வொரு மாதமும் சுத்தம் செய்ய வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். குழந்தைகளை ஏசி அறையில் வைக்கும்போது, அவர்களை மெல்லிய துணியில் சுற்றி வைப்பது நல்லது. மேலும், குழந்தைக்கோ அல்லது தாய்க்கோ சளி இருந்தால், அது குணமாகும் வரை ஏசி பயன்படுத்தக் கூடாது. மேலும் குழந்தைகளுக்கு தேவை இல்லாவிட்டாலும், தாய்மார்களுக்கு ஏசி தேவைப்பட்டால், நிச்சயமாக பயன்படுத்தலாம் என்று மருத்துவர் கூறியுள்ளார்