தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் வகையில் கடந்த ஆண்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் அனைத்து சத்துக்களும் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக கிராமங்களில் விளையும் காய்கறிகளைக் கொண்டு தூய்மையான முறையில் சத்துணவு உணவு தயார் செய்யும் படி அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு செய்யும்போது அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து குறைப்பாடால் பாதிக்கப்படும் மெலிந்திருக்கும் ஒரு குழந்தையை பார்த்ததாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் எந்த ஒரு குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடாது என்றும் அனைத்து குழந்தைகளுக்கும் அரசு சார்பாக போதுமான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதில் இருப்பதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இந்த நிலையை மாற்றுவதற்காக ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.