சமூக வலைதளங்களில் இணையதள வாசிகளுக்கு டாஸ்க் கொடுத்த பெண்ணுக்கு நெட்டிசன் ஒருவர் பதிலளித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவர்களது புகைப்படத்தை பதிவிட்டு அதில் ஏதேனும் கேள்வி கேட்குமாறு அல்லது அதை எடிட் செய்து தருமாறு அல்லது வேறு ஏதேனும் புகைப்படம் தொடர்பாக டாஸ்க் கொடுப்பது சமீபத்திய வைரல் நிகழ்வாக காணப்படுகிறது. அந்த வகையில், இளம்பெண் ஒருவர் தன்னுடைய ட்விட்டர்  பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டு தன்னுடைய உயரத்தை கணித்து கூறும் படி இணையதள வாசிகளுக்கு டாஸ்க் கொடுத்துள்ளார். அதை பார்த்த விஐபி நெட்டிசன்கள்  சிலர் முயற்சிக்க,

ஒரு நெட்டிசன் அதற்கான விடையை ஐபோன் மூலம்  கணித்துக் கூறியுள்ளார். அதன்படி, புகைப்படத்தில் உள்ள பெண் ஒரு கண்ணாடி முன்பு நின்று தன்னுடைய ஐபோன் மூலம் புகைப்படம் எடுத்துள்ளதை உற்று நோக்கி அது  ஐபோன் 12 மாடல் என்பதை அறிந்து அதற்கான அளவு என்ன என்பதை இன்டர்நெட்டில் கவனித்து 14.3 cm  என்பதை குறிப்பிட, பின்  கையில் வைத்திருக்கும் ஐபோன்-ஐ  ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கினால் அந்தப் பெண்ணின் உயரத்திற்கு 9 ஐபோன் அடுக்கலாம் என  கணக்கிட்டு பின் ஐபோன் 12 மாடலின் 14.3 cm என்ற அளவுடன் 9ஐ  பெருக்கியுள்ளார்.

வந்த விடையின் அடிப்படையில் அவரது உயரம் 4.3 அடி என்பதை கணக்கிட்டு சொல்லியுள்ளார். இதைத் தொடர்ந்து புகைப்படம் வெளியிட்ட பெண்ணிடம் இதுதான் உங்களுடைய உண்மையான உயரமா என நெட்டிசன்கள் தொடர்ச்சியாக கேட்க, அதற்கு அந்த இளம் பெண் 5.2 என மறுப்பதிலிட, அதற்கும் சம்பந்தப்பட்ட நெட்டிசன்  நீங்கள் வளைந்து நின்றதால் தான் தன்னால் சரியாக கணக்கெடுக்க முடியவில்லை என நக்கலாக பதில் அளித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.