தற்போது உங்களது குழந்தைக்களுக்கான பான்கார்டை விண்ணப்பிப்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

# முதலில் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரீஸ் லிமிடெட்டின் அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு செல்ல வேண்டும்

# தேவையான விபரங்களை உள்ளிட வேண்டும்.

# குழந்தைகளுக்கான பான்கார்டுக்கு விண்ணப்பிக்க சரியான கேடகரியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

# பான் கார்டு பதிவுக்கட்டணம் ரூ.107 செலுத்தி விண்ணப்ப படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள் 

# குழந்தையினுடைய பெற்றோரின் முகவரி மற்றும் அடையாளச்சான்று.

# விண்ணப்பதாரரின் முகவரி மற்றும் அடையாளச் சான்று.

# குழந்தையின் பாதுகாவலர் ஆதார் கார்டு (அ) ரேஷன் கார்டு (அ)  பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் (அ) வாக்காளர் ஐடி போன்றவற்றை அடையாளச் சான்றாக சமர்ப்பிக்கலாம்.

# ஆதார் கார்டு, தபால் அலுவலக பாஸ்புக், சொத்துபதிவு ஆவணம் (அ) அசல் குடியிருப்பு சான்றிதழ் போன்றவை முகவரி சான்றாக செயல்படும்.

வங்கிக்கணக்கு, டிமேட் கணக்கு துவங்குதல், கடன் வாங்குதல், சொத்து வாங்குதல், பத்திரங்களில் முதலீடு செய்தல் மற்றும் அரசு வழங்கும் நிதி வசதிகள் ஆகியவற்றுக்கு பான் கார்டு அவசியம்.