தானேவில் சிறுவன் ஒருவன் வாங்கி சாப்பிட்ட பாக்கெட் ஐஸ்கிரீம் கோனில் புழு இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் ஐஸ்கிரீமைச் சாப்பிட்டபோது, அதனுள் புழு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தான்.இது குறித்து அவனது உறவினர் சம்பந்தப்பட்ட ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டில் பெரும் குறைபாடு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அசுத்தமான முறையில் தயாரிக்கப்படும் இத்தகைய உணவுப் பொருட்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
View this post on Instagram
“>
இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் மற்றும் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த உறவினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இத்தகைய புகார்களைத் தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, சந்தையில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை முறையாகச் சோதிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
